Thursday, September 10, 2015

கமல் அஜித்துக்கு பயந்து தனுஷ் திடீர் முடிவு!



கமலின் ‘தூங்காவனம்’ அஜித்தின் ‘தல 56’ மற்றும் தனுஷின் ‘விஐபி 2’ ஆகிய படங்கள் தீபாவளி ரேஸில் கலந்து கொள்ளவிருந்தது. ஆனால் தீபாவளியானது  10ஆம் தேதி செவ்வாய்கிழமை வருவதால் அதற்கு முன்பே வார விடுமுறை நாட்கள் வருவதால் அன்றைய தினங்களில் கமல் அஜித் படங்கள் வெளியாகவிருக்கிறது. அதாவது 5ஆம் தேதி (வியாழக்கிழமை) அஜித் படமும்  6ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கமல் படமும் வெளியாகவுள்ளது. இந்த இருபடங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் படங்கள் வெளியாகும்.  மேலும் படத்தின் வசூலும் பிரியும் நிலை ஏற்படும். எனவே தனுஷ் தன் முடிவில் சிறிய மாற்றத்தை செய்துள்ளாராம். அதாவது ஒரு வாரம் கழித்து தன் ‘விஐபி-2’ படத்தை வெளியிடும் முடிவில் இருக்கிறாராம். தனுஷ் தயாரித்து நடித்திருக்கும் இப்படத்தில் சமந்தா எமி ஜாக்சன் சதீஷ் ராதிகா கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கியுள்ளார். 

No comments:

Post a Comment