Sunday, September 13, 2015

ஆயிரத்தில் அஜித் ரசிகர்களை முந்திய விஜய் ரசிகர்கள்!



எந்தவொரு விஷயத்திற்கும் ஆரம்பம் ஒன்று இருந்தால் முடிவு ஒன்றிருக்கும் ஆனால் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களின் மோதலுக்கு என்று முடிவு வரும்? என்று சம்பந்தப்பட்ட ரசிகர்களுக்கே தெரியும்.

அஜித்துக்காக ரசிகர்கள் ஏதாவது செய்தால் அதனை முறியடிக்க விஜய் ரசிகர்கள் ஏதாவது செய்வதுண்டு பின்னர் இவர்களின் சாதனையை அவர்கள் முறியடிப்பார்கள் தற்போது நாம் பார்க்கபோகும் விஷயமும் அந்த சாதனை பற்றியதுதான்.

 கடந்த பிப்ரவரி மாதம் அஜித் நடித்த என்னை அறிந்தால் படம் வெளியானது இதற்கு முன்னரே இப்படத்தின் டீஸர் வெளியானது.

இப்படத்தின் டீஸர்தான் தென்னிந்தியாவிலேயே 95 ஆயிரம் லைக்ஸ் பெற்று முதலிடத்தில் இருந்தது இந்நிலையில் சில நாட்களுக்கு முன் சிம்புதேவன் இயக்கிய விஜய்யின் புலி படத்தின் ட்ரைலர் வெளியானது.

தற்போது இது 96 ஆயிரம் லைக்ஸ் பெற்றுள்ளது அதாவது என்னை அறிந்தால் படத்திற்கு கிடைத்த லைக்ஸை விட ஆயிரம் அதிகமாக பெற்று தற்போது தென்னிந்தியாவில் முதலிடம் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment