
அஜித் தற்போது சிவா இயக்கத்தில் தல-56 படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்க படத்தை ஏ.ஏம் ரத்னம் தயாரித்து வருகிறார். இப்படத்தில் அஜித்துடன் சூரி அஸ்வின் ஸ்ருதிஹாசன் லட்சுமிமேனன் ஆகியோரும் நடித்து வருகின்றனர். தற்போது இவர்களுடன் காமெடி மற்றும் குணச்சித்திர கேரக்டரில் கலக்கி வரும் வித்யூலேகா ராமனும் இணைந்துள்ளார். இதனை இவரே தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில்… “மகிழ்ச்சி…. தல 56 படத்தில் நான் இணைந்துள்ளேன்” என தெரிவித்துள்ளார். இவர் சூரிக்கு ஜோடியாக படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இதற்கு முன்பே அஜித்துடன் ‘வீரம்’ விஜய்யுடன் ‘ஜில்லா’ சூர்யாவுடன் ‘மாஸ்’ படத்தில் இணைந்து நடித்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள விஜய்யின் புலி படத்திலும் இவர் நடித்துள்ளார். இவர் பிரபல நடிகர் மோகன் ராமன் அவர்களின் மகளும் இயக்குனர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலியின் உறவுக்கார பெண் என்பதும் நாம் அறிந்ததே.
No comments:
Post a Comment