Sunday, September 13, 2015

வாட்ஸ்அப்பை கலக்கும் ரஜினியின் கபாலி செல்ஃபி!



ஏழே நாட்களில் வெளியாகவுள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி பர்ஸ்ட் லுக் ஆனால் அதுவரை காத்திருக்க முடியாத ரஜினி ரசிகர்களுக்கு நேற்று இரவு முதல் விருந்தாய் அமைந்தது ரஜினியின் கபாலி செல்ஃபி.

ரஜினியே செல்ஃபி எடுத்து கொண்டது போன்ற ஒரு புகைப்படம் வாட்ஸ்அப் மற்றும் இணையத்தளங்களில் பரவியது இதனைப்பார்த்த பலரும் இது ஒரிஜினல் ரஜினிதான் இதுதான் கபாலியில் தலைவரின் புதிய கெட்டப் என்று கூறிவருகின்றனர்.

ஆனால் இதனையறிந்த கபாலி படக்குழுவோ உடனடியாக இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இது கபாலி போட்டோ ஷூட் நடைபெறும் போது எடுத்த புகைப்படம் அல்ல என்றும் அவர்கள் கூறினர்.

மேலும் இயக்குனர் ரஞ்சித் தன் ட்விட்டர் பக்கத்தில் அந்த புகைப்படத்திற்கும் ரஜினிக்கும் சம்பந்தம் இல்லை என தெரிவித்துள்ளார்  இதனால் தீ போல் பரவிய இந்த செய்தி தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

வருகிற செப்டம்பர் 17ஆம் கபாலி படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு படப்பிடிப்பை சென்னையில் துவங்கவிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment