Thursday, November 12, 2015

வேதாளம் படத்தில் விஜய்யை கலாய்த்த அஜித்!




அஜித்தின் வேதாளம் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது சிவா இயக்கியுள்ள இப்படத்தில் அஜித்துடன்லட்சுமி மேனன் ஸ்ருதி ஹாசன் தம்பி ராமையா சூரி மற்றும் பலர் நடித்துள்ளனர் அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார்.

இந்த படம் முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களை மனதில் வைத்து எடுத்த படம் போலவே தூணுது அஜித் ரசிகர்களுக்கு காட்சிக்கு காட்சி விருந்து கொடுத்துள்ளார் அஜித் ரசிகர்களை திருப்தி படுத்த பலரை பயங்கரமாக கலாய்த்து இருக்கும் சிவா பல இடங்களில் சில நடிகர்களை சீண்டி பார்த்துள்ளார் அதிலும் படத்தின் அஜித் அறிம்ய்க காட்சியிலே விஜய்யை மிகவும் கலாய்த்து உள்ளார் .

கத்தின விஜய் என்று சொல்லுவார்கள் விஜய் நடித்து வெளியான கத்தி படம் மிக பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றி படம் என்பது இந்த உலகத்துக்கே தெரியும் அப்படி இருக்கும் போது அஜித்தின் அறிமுக காட்சியில் மொட்டை ராஜேந்திரன் கொல்கத்தா ரயில் நிலையத்தில் தன் 230 வது கொலை செய்ய வரும்போது கத்தியை வீசுவார் அது அஜித்தின் ட்ரன்க் பெட்டிஅதாவது இரும்பு பெட்டிஅதில் கத்தி குத்தும் அதை எடுத்து மிக அனாவசியாமாக தொக்கி கிழே எறிந்துவிட்டு போவார் அஜித் இப்படி செய்யலாமா சிவா சார் ஒரு மாஸ் ஹீரோ பப்டத்தின் பெயர் படத்தின் பெயர் என்று தெரியாமல் செய்தாரா இல்லை அஜித் ரசிகர்கள் கவனம் இவர்மேல் வரணும்னு செய்தாரா?

Thursday, October 15, 2015

வேதாளம் மர்மம் வெளியாகியது..??


‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வேதாளம்’. இப்படத்தில் ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், தம்பிராமையா, அஸ்வின் கக்குமனு, அப்புக்குட்டி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொல்கத்தா மற்றும் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்படம் ‘பாட்ஷா’ படத்தை போன்று கேங்ஸ்டர் மற்றும் ஒரு ஆக்ஷன் பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது. இப்படம் குறித்த சில விஷயங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தில் அஜித், கணேஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். லட்சுமி மேனன் தமிழ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். தம்பிராமையா இவர்களுக்கு அப்பாவாகவும், அப்புக்குட்டி அஜித்துக்கு நண்பராகவும் நடித்துள்ளார்களாம். ஆரம்பத்தில் கணேஷாக வரும் அஜித், பிளாஸ்பேக் காட்சிகளில் டானாக வருகிறாராம். கணேஷ் கதாபாத்திரம் முழுவதும் கொல்கத்தாவில் படமாக்கியுள்ளனர். டான் கதாபாத்திரத்தை சென்னையில் படமாக்கியிருக்கிறார்கள். இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதேவேளையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஆளுமா டோலுமா’ என்ற பாடலின் டீசர் தற்போது வெளிவந்திருக்கிறது. இந்த டீசரும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களை நாளை வெளியிடவுள்ளனர். தொடர்ந்து தீபாவளிக்கு படம் வெளியாகிறது.

நிறைய பேர் வாளைத் தீட்டியபடி காத்திருந்தனர்: வெற்றி குறித்து தோனி




இந்தூர் ஒரு நாள் போட்டியில் வென்ற பிறகு ஆட்ட நாயகன் தோனி மற்றும் அணி வீரர்கள். | படம்: பிடிஐ.

இந்தூர் ஒருநாள் போட்டியில் 92 ரன்களை எடுத்து பிறகு அருமையாக பந்து வீச்சு மாற்றங்கள், களவியூகங்கள் அமைத்து குறைந்த இலக்கை கையில் வைத்துக் கொண்டு தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திக் காட்டிய கேப்டன் தோனி ஆட்டம் முடிந்த பிறகு வெற்றி குறித்து தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
பரிசளிப்பு நிகழ்ச்சியில் தோனி சில கருத்துகளை பரிமாறிக் கொண்டார்.

அதாவது வெற்றி பெற முடியாது போயிருந்தால், “நிறையபேர் வாளைத் தீட்டிக் கொண்டு காத்திருந்தனர், அதாவது நிறைய பேர் நான் தவறுகள் செய்வதற்காகக் காத்திருந்தனர். ஆனால் சுலபமான ஆட்டம் அல்ல இது. இன்னும் கொஞ்சம் ரன்களை சேர்த்திருக்க வேண்டும். 

பந்து வீச்சையும் நன்றாகத் தொடங்கவில்லை. ஆனால் சுழற்பந்து வீச்சாளர்கள் நன்றாக வீச, பிற்பாடு வேகப்பந்து வீச்சும் இணைந்து கொண்டது. ஒட்டுமொத்தமாக திருப்திகரமான வெற்றியல்ல, ஆனால் நல்ல வெற்றி. இன்னும் கூட சிறப்பாக ஆட வேண்டும். 

திறனுக்கேற்ப விளையாடுவதில்லை, பந்துவீச்சு பேட்டிங் இரண்டிலுமே 80% கூட திறமை வெளிப்படவில்லை. ஒரு முழுமையான பேட்டிங் வரிசையாக இன்னும் சரியாக ஆடவில்லை. ஆனால் மீண்டு வந்து வென்றுள்ளோம். 

தாஹிர், ரபாதா பேட் செய்து கொண்டிருந்த போது அவர்களை வீழ்த்த 2 நல்ல பந்துகளை வீசவேண்டும் என்று நினைத்தோம். ஆட்டம் எங்கள் கையில் இருந்தது என்று நான் கூற மாட்டேன். ஆனால் சரியான இடத்தில் வீசினால் இரண்டு பந்துகள் போதும் அவர்களை வீழ்த்த.

கடந்த 2 அல்லது இரண்டரை ஆண்டுகளாக டாப் ஆர்டர் வரிசை சிறப்பாக பேட் செய்து வந்தபோது பின்வரிசை வீரர்களுக்கு பேட்டிங் வாய்ப்பு குறைவாகவே கிடைத்து வந்தது. சுரேஷ் ரெய்னா தவிர வேறு எவரும் இறங்கியவுடன் பெரிய ஷாட்களை ஆடுவதில் விருப்பம் காட்டவில்லை.

அக்சர் படேல் குறித்து...

அக்சர் படேல் பந்தை பெரிய அளவில் திருப்புபவர் அல்ல. ஆனால் அவர் சரியான லெந்தில் வீசினார். ஹர்பஜன் அனுபவஸ்தர், ஆனால் இருவரும் பந்துவீச்சு முறைகளில் சோதனை முயற்சிகளில் இறங்கவில்லை, அதாவது ஓவர் பிளைட் அல்லது குறைந்த பிளைட் என்பது தேவைப்பட்டது, ஒட்டுமொத்தமாக அவர்கள் நல்ல முறையில் செயல்பட்டனர்.

இவ்வாறு கூறினார் தோனி.

Monday, October 12, 2015

Revealed: Argument between MS Dhoni and Virat Kohli in the team meeting resulted India defeat

Virat Kohli (L), MS Dhoni (R)

Revealed: Argument between MS Dhoni and Virat Kohli in the team meeting resulted in India's defeat 

The reason why MS Dhoni messed up team selection that resulted to India’s  5 run defeat in the first ODI of the five-match series against South Africa at Green Park, Kanpur is revealed. Captain MS Dhoni and vice-captain Virat Kohli got involve in an argument before the first ODI of the series at the team meeting reported by Hindi national daily Jagran Post. Indian team selection has taken everybody by surprise. On the eve of the match, MS Dhoni apparently said that he was finding difficult to play Ajinkya Rahane in the playing XI as the Mumbai batsman only fit in the top three. And in the current Indian set up the number three positions are occupied by Shikhar Dhawan, Rohit Sharma, and Virat Kohli. He also said that as the Kanpur ODI would be played under daylight, so Axar Patel would not have to face any dew problem. 
But, in the next morning when the team news came to know, there was surprise of surprise as what Dhoni said on the eve of the match and India's final playing XI were totally different that left journalist, fans and critic to murmur is the authority question MS Dhoni over team selection got over? and what did force Dhoni to pick up a team like this?
The answer came to know after the defeat. 
Ambati Rayudu and Axar Patel excluded from the team while Ajinkya Rahane and Stuart Binny have replaced them.


The reason now revealed. In the team meeting, Team Director Ravi Shastri insisted MS Dhoni to take Ajinkya Rahane in the team as the batsman has been in good shape since the Test series victory in Sri Lanka. The bemused captain asked Shashtri how could I take him in the team? Where would he play?. But, as Shastri was too much persistent MS Dhoni agreed to pick Rahane in the team, but on one condition-Virat would have to play at no.4. But, Virat opposed Dhoni’s decision, he said that he could not bat at that positions. So, ego could be another reason for India's defeat as Virat got out scoring only 11 runs at the crucial juncture of the match. Kanpur fans constantly were chanting Virat Kohli's name, who was fielding at the boundary line. Virat sparked fuel in their chanting by urging them to chant his name with more noise.
MS Dhoni praised Ajinkya Rahane, who scored 82 balls 60, in the post-match press conference. 
However, the team selection now displayed that MS Dhoni lost his authority over the Indian team.

வேதாளம் இசை வெளியீட்டு தேதி வெளிவந்தது ரசிகர்கள் உற்சாகம்!



வேதாளம் படத்தின் டீசர் ஏற்கனவே இந்திய அளவில் கலக்கி வருகின்றது இந்நிலையில் முதன் முறையாக இசையமைப்பாளர் அனிருத் அஜித்துடன் கைக்கோர்த்துள்ளார். இதனால் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் ஆல்பம் எப்போது ரிலிஸ் என்று தன் டுவிட்டர் பக்கத்தில் அனிருத் தற்போது தெரிவித்துள்ளார். -

Wednesday, October 7, 2015

வேதாளம் தலைப்பு மாறுகிறதா!



அஜித் நடிப்பில் அடுத்து வேதாளம் திரைப்படம் தீபாவளிக்கு வரவிருக்கின்றது இந்த டைட்டில் ஏற்கனவே ரசிகர்களுக்கு எதிர்ப்பார்த்த அளவு திருப்தி இல்லை என கூறப்பட்டது. இந்நிலையில் புலி படத்தின் கதையே வேதாள உலகத்தை சுற்றி தான் பல இடங்களில் வேதாளம் என்று குறிப்பிட்டு இருப்பார்கள் மேலும் விஜய் தான் வேதாளாமாகவே நடித்திருப்பார். இதனால் இப்படம் வரும் போது ரசிகர்களிடம் மேலும் மோதலை உண்டாக்கும் என்று எண்ணிய அஜித் இந்த டைட்டிலை மாற்றலாமா? என்று யோசித்து வருகின்றாராம். 

கபாலி படத்தின் ரகசியம்!





ரஞ்சித் இயக்கிவரும் கபாலி படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் டானாக நடிப்பதாகத் தானே தகவல் வெளியானது. 

ஆனால் உண்மையில் அவர் இப்படத்தில் அண்டர்கவர் ஒபரேஷனில் இருக்கும் போலிஸ் ஆபீஸராக நடித்து வருகிறாராம் கபாலி படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் முடிவுக்கு வருகிறது.

இதைதொடர்ந்து இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வரும் அக்டோபர் 19-ம் தேதி மலேசியாவில் தொடங்கி ஒருமாத காலம்வரை அங்கு நடைபெறவுள்ளது. 


ரஜினி ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்கும் இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் தன்ஷிகா கிஷோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்கலில் நடித்து வருகிறார்கள். 

இந்தியாவுக்கு 3-0 தோல்வி: டேவிட் மில்லர் திட்டவட்டம்


கட்டாக்கில் இந்திய அணி விக்கெட் ஒன்றை கொண்டாடும் தென் ஆப்பிரிக்க வீரர்கள். | கோப்புப் படம்.


டி20 கிரிக்கெட் தொடரில் 2-0 என்று முன்னிலை வகிக்கும் தென் ஆப்பிரிக்கா 3-வது போட்டியிலும் வென்று இந்தியாவுக்கு 3-0 தோல்வியைப் பெற்றுத் தரும் என்று அந்த அணியின் டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.

சற்றும் எதிர்பாராத விதத்தில் டி20-யில் ஆதிக்கம் செலுத்தும் தென் ஆப்பிரிக்கா அணியின் மனநிலை பற்றி டேவிட் மில்லர் உற்சாகம் தெரிவித்தார்.

"நாங்கள் 2-0 என்று முன்னிலையில் உள்ளோம், எனவே 3-0 என்று அதனை மாற்ற உறுதியாக இருக்கிறோம். எங்கள் தயாரிப்புகள் உண்மையிலேயே நல்ல முறையில் அமைந்தது. அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறோம், நாளை கொல்கத்தாவில் மீண்டும் ஆதிக்கம் செலுத்துவோம்.

கொல்கத்தாவுக்கு 2-0 என்ற முன்னிலையுடன் வருவது அருமையாக உள்ளது. தொடரை வென்றது உண்மையில் பெரிய வெற்றியே. இங்கு வரும்போதே நன்றாக ஆட வேண்டும் என்ற உறுதியுடனும், எங்களுக்கு நாங்களே அழுத்தம் கொடுத்துக் கொண்டும் வந்தோம்.

மிகப்பெரிய வீரர்களுடன் கூடிய இந்திய அணி ஒரு மிகப்பெரிய டி20 அணியாகும். எனவே உலக டி20 இங்கு நடைபெறும் நிலையில் இந்தியாவை வீழ்த்தியது பெரிய தன்னம்பிக்கையை அளிக்கிறது. 

இந்த ஆண்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுகிறோம். அதற்கு இந்தத் தொடரில் வெற்றி பெறுவதென்பது மிகப்பெரிய தன்னம்பிக்கை ஊட்டமாகும்” என்றார். 

பனிப்பொழிவு இருப்பதால் உள்நாட்டு டி20 போட்டிகளை இன்னும் முன்னதாக ஆரம்பிக்க வேண்டும் என்று தோனி கூறியிருப்பது பற்றி டேவிட் மில்லரிடம் கேட்ட போது, “எனக்கு இது பற்றி என்ன கூற வேண்டுமென்று தெரியவில்லை. பனிப்பொழிவு ஓரளவுக்கு பிரச்சினையே. ஆனால் இது இரு அணிகளுக்கும்தானே. இதனை பெரிதாக எடுத்துக் கொள்ள எதுவுமில்லை என்றே கருதுகிறேன்.

நாங்கள் இங்கு வந்து வெற்றி பெறுவதற்கு ஐபிஎல் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் பலர் ஆடுவதும் காரணம். ஐபிஎல் ஒரு அருமையான தொடர், நிறைய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கிறது. நிச்சயம் தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு இந்திய பிட்ச் நிலைமைகள் நன்றாக தெரிய ஐபிஎல் ஒரு மிகப்பெரிய உதவி புரிந்துள்ளது. நாங்கள் உள்நாட்டில் விளையாடுவது போல்தான் உணர்கிறோம்”

இவ்வாறு கூறினார் மில்லர்.

நீங்கள் விஜய், அஜித் இடத்தில் இல்லை: விஷாலுக்கு ராதிகா அறிவுரை



ராதிகா, சிம்பு, பாக்யராஜ் கலந்துகொண்ட பத்திரிகையாளர் சந்திப்பு | படம்: எல்.சீனிவாசன்

நீங்கள் ரஜினி, கமல், அஜித், விஜய் இடத்துக்கு வரவில்லை. என்று விஷாலுக்கு ராதிகா அறிவுறுத்தியிருக்கிறார்.
நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக சரத்குமார் அணியின் சார்பில் இன்று மாலை சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இதில் ராதிகா, சிம்பு, பாக்யராஜ், ஊர்வசி, மோகன்ராம், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
இந்நிகழ்ச்சியில் ராதிகா பேசியதாவது:
"இப்போது இருக்கும் சூழ்நிலை எனக்கு ரொம்ப அவமானமாக இருக்கிறது. நான் ஒரு நடிகை என்று சொல்வதற்கே அசிங்கமாக இருக்கிறது.
சி.சி.எல் என்று நடிகர்கள் எல்லாம் ஒன்றிணைந்து கிரிக்கெட் விளையாடும் அமைப்பு ஒன்றை சரத்குமார் தொடங்கினார். அப்போது ஆரம்பித்தது பிரச்சினை. சரத்குமார் மீது அன்று முதல் காழ்ப்புணர்ச்சி ஆரம்பமானது.
துபாயில் சரத்குமாரிடம் தவறாக நடந்து கொண்டார் விஷால். அப்போது இது தவறு, இப்படி எல்லாம் பண்ணக் கூடாது என்றேன். அப்போது அதை கேட்டுகொள்ளும் நிலைமையில் விஷால் இல்லை. மறுநாள் சரத்குமாரிடம் இனிமேல் உங்களுக்கு மரியாதை இல்லாத இடத்துக்கு வராதீர்கள் என்று கூறிவிட்டேன். அன்று முதல் இன்று வரை சரத்குமார் அதில் பங்கேற்பதில்லை.
திடீரென்று கையெழுத்து இயக்கம் என்று ஒன்றை ஆரம்பித்தார்கள். அப்போது கார்த்தி, நாசர், கமல் ஆகியோரிடம் பேசினேன். யாருமே சரியாக பதில் சொல்லவில்லை. ஆனால், கமல் அதில் முதலில் கையெழுத்திட்டார்.
இன்றைக்கு என் குடும்பத்தை தாக்குகிறார்கள். என் மகள், மகனை தவறாக பேசுகிறார்கள். எனக்கு வேதனையாக இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு விஷாலிடம் "உங்களுக்கு என்னப்பா வேண்டும்?" என்று கேட்டேன். அப்போது அவரால் சரியாக பதில் சொல்லமுடியவில்லை. கட்டிடம் வேண்டுமா வாருங்கள். ஒற்றுமையாக இருக்கலாம். இந்த பிரிவினை வேண்டாம்.
லண்டன் சென்றிருந்த போது கமல் சாரிடம் பேசினேன். அப்போது, "இந்த அசிங்கத்துக்குள் வர விரும்பவில்லை". இது தான் அவர் சொன்ன வார்த்தை. இது அவருடைய விருப்பம். இந்த சண்டை வேண்டாம்.
நாளைக்கு நாசர், கார்த்தி, விஷாலை நான் பார்க்க மாட்டேனா? தவறாக பேசுகிறார்கள். இது என்ன அரசியல் மேடையா? 3000 ஓட்டுகள் அவ்வளவு தான் பிரச்சினை.
என்னுடைய கணவர் சரத்குமார் கமலைக் குற்றம் சாட்டினார். அவர் எல்லா விஷயத்துக்கும் போய் நிற்பார். சில விஷயங்கள் எனக்கு உடன்பாடு கிடையாது. 'உத்தம வில்லன்', 'விஸ்வரூபம்' உள்ளிட்ட படங்களின் பிரச்சினையின் போது சரத்குமார் போய் நின்றார். கமல் சாரிடம் நீங்கள் நன்றி சொல்ல வேண்டும் என்று நான் கேட்கவில்லை. நீங்கள் ஒரு பெரிய நடிகர் என்று உங்களை கெளவரப்படுத்துகிறோம் இல்லையா. கமல் சார், ரஜினி சார் ஆகியோரிடம் ஒன்றை மட்டுமே கேட்கிறோம். இங்கே ஒரு சண்டை ஒன்று நடக்கிறது, ஏன் வரமாட்டேன் என்கிறீர்கள். அது தான் எனக்கும் சரத்குமாரும் வருத்தம்.
விஷால், கார்த்தி இருவரையும் பின்னாடி இருந்து யாரோ தூண்டி விடுகிறார்கள் என்பது தான் உண்மை. உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை முதலில் தெளிவாக சொல்லுங்கள்.
நடிகர் சங்கத்துக்கு வருமானம் வரும்படி செய்வோம் என்றார்கள். அதுதான் எனக்கு மிகவும் தொந்தரவாக இருந்தது. விஷாலிடமே நேரடியாக கேட்டேன். 'தம்பி... நீங்க ரஜினி, கமல், அஜித், விஜய் இடத்துக்கு வரவில்லை. உங்களது முந்தைய படமே தமிழ்நாட்டில் 5 கோடி மட்டுமே வசூல் செய்தது. உங்கள் படத்துக்கு 30 கோடி வரும் என்று தயவு செய்து சொல்ல வேண்டாம். எல்லாரும் உங்களைப் பார்த்து சிரிப்பார்கள்' என்றேன். அவரால் பதில் பேச முடியவில்லை.
அதேபோல், 'நீங்கள் இப்போதுதான் மார்க்கெட்டை சரி செய்துகொண்டு இருக்கிறீர்கள்' என்று கார்த்தியிடம் சொன்னேன். இதெல்லாம் யாரை ஏமாற்றும் வேலை என்று தெரியவில்லை.
ஒரே நல்ல விஷயம், இந்த பிரச்சினையை நிறுத்த வேண்டும் என்று திரைத்துறை கூட்டாக சொல்லியிருக்கிறது. நாம் அனைவருமே நண்பர்கள். நானும் ஒரு நாடக நடிகருக்குப் பிறந்தவர். நாடக நடிகர்களை வேறுபட்டு பார்க்கக் கூடாது. இன்று தமிழ் சினிமா குடும்பத்தில் நடக்கும் சண்டைக்கு நீங்கள்தான் (விஷால் அணி) காரணம். இதுதான் உங்களுடைய இலக்கா? தயவு செய்து சிந்தித்து, எங்களுடன் பேசுங்கள்'' என்று ராதிகா பேசினார்.

Sunday, October 4, 2015

புலி படத்திற்காக உயிரை விட்ட விஜய் ரசிகர்கள்..!

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்த ‘புலி’ படம் உலகம் முழுவதும் அக்டோபர் 1ஆம் தேதி வெளியானது. இப்படம் வெளியாவதற்கு முந்தைய இரவு அனைத்து தியட்டர்களிலும் களைகட்டியது. ஆங்காங்கே ஆரத்தி, பாலாபிஷேகம், அழகு குத்துவது என அமர்கலப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் தாம்பரம் அருகேயுள்ள மணிமங்கலத்தை சேர்ந்த விஜய் ரசிகர்களான உதயகுமார் மற்றும் சௌந்தரராஜ் (இருவரின் வயதும் 22) இருவரும் ‘புலி’ படத்தை வரவேற்கும் வகையில் வாழ்த்து போஸ்டர்கள் ஒட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு இடமாக போஸ்டரை ஒட்டிக் கொண்டே மோட்டார் பைக்கில் சென்றுள்ளனர். அப்போது வண்டலூர் சாலையில் வேகமாக வந்த லாரி இவர்கள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த இருவரும் லாரி டயரில் சிக்கி பரிதாபமாக இறந்துள்ளனர். ஆனால் அந்த லாரி டிரைவரோ லாரியை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றுள்ளார். இதையடுத்து மணிமங்கலம் போலீசார் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். தற்போது இதுகுறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. -

Thursday, October 1, 2015

முதல் பார்வை: புலி - 'அட்டாக்' பண்ணாத பாய்ச்சல்!






விஜய் நடிப்பில் 58-வது படம், விஜய் - சிம்புதேவன் கூட்டணியில் முதல் படம், ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா, சுதீப், ஸ்ரீதேவி என நல்ல ஸ்டார் காஸ்டிங் உள்ள படம், நட்டி நட்ராஜ் ஒளிப்பதிவு, தேவிஸ்ரீ பிரசாத் இசை, முத்துராஜின் கலை இயக்கம், ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு என்ற சிறந்த டெக்னீஷியன்கள் பணியாற்றிய படம் என்ற இந்த காரணங்களே 'புலி' மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.
'பாசத்துக்கு முன்னாடிதான் நான் பனி. பகைக்கு முன்னாடி நான் புலி' என்று விஜய் பேசும் பன்ச் டயலாக் ட்ரெய்லரிலேயே ஹிட்டடித்தது. படம் ரசிகர்கள் மனதில் ஹிட்டடித்ததா?
'புலி' கதை: அடிமைகளில் ஒருவராக வளரும் விஜய் தன் காதல் மனைவியைக் காப்பாற்ற ஆளும் அரச வம்சத்தை எதிர்க்கிறார். இடையில் தன் வரலாறை அறிந்துகொள்கிறார். அதற்குப் பிறகு என்ன செய்கிறார்? காதல் மனைவியை மீட்டாரா? அவருக்கு யார் யார் உதவினார்கள்? எப்படி பகையை வெல்கிறார்? என்பது மீதிக் கதை.
மருதீரன் கதாபாத்திரத்துக்கு விஜய் நச்சென்று பொருந்துகிறார். முதல் பாடலிலேயே டான்ஸில் பின்னி எடுப்பது, பன்ச் பேசுவது, காதல் செய்வது, துரோகத்தைக் கண்டு பொருமுவது, பகையைக் கண்டு எகிறுவது, இழப்பில் வருந்துவது என எல்லா பக்கமும் ஸ்கோர் செய்கிறார். வழக்கமாக விஜய்க்கு என்று ஒரு நகைச்சுவைத் தன்மை இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் அப்படி எதுவும் இல்லை.
'இப்படிக் கூட காதலை சொல்வியா நீ?' என்று கேட்கும் ஸ்ருதி ஹாசன் படம் முழுக்க ஆடை குறைப்பில் தாராளம் காட்டியிருக்கிறார்.
ஹன்சிகா மோத்வானி அழகாக இருக்கிறார். நன்றாக டான்ஸ் ஆடுகிறார். மற்ற படி படத்தில் வந்து போகிறார்.
சுதீப் என்ட்ரி ஆகும்போது காட்டும் கம்பீரம், படம் முழுக்க இல்லை. கொஞ்சம் கொஞ்சம் முறைப்பதும், துரோக முகம் காட்டுவதுமாக கடந்து செல்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் ஸ்ரீதேவி மறுவருகை புரிந்திருக்கிறார். வரவேற்க நாம் தயாராக இருந்தாலும், வருகையின் விதம் அவ்வளவு பிரகாசமாக இல்லை. கண்களை உருட்டும், உடல் மொழியால் மிரட்டும் ஸ்ரீதேவி கூடுதல் மேக்கப்பில் மட்டும் ஸ்ரீதேவி கொஞ்சம் பயமுறுத்துகிறார்.
தம்பி ராமையா, சத்யன் ஆகியோர் காமெடி செய்ய முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், காமெடி மிஸ்ஸிங்.
பிரபு, நரேன், நந்திதா, வித்யூ லேகா, ரோபோ ஷங்கர், இமான் அண்ணாச்சி, வடிவுக்கரசி, சங்கிலி முருகன், விஜயகுமார் ஆகியோர் பொருத்தமான தேர்வு.
முத்துராஜின் கலை இயக்கமும், கிராபிக்ஸ் காட்சிகளும் படத்துக்கு கூடுதல் பலம். நட்டி நட்ராஜ் படத்துக்கான ஒட்டு மொத்த பிளஸ்ஸையும் கேமராவில் அள்ளி வந்திருக்கிறார்.
தேவிஸ்ரீ பிரசாத் இசையில் புலி புலி பாடலும், ஏன்டி ஏன்டி மெலடி பாடலும், ஜிங்கிலியா பாடலும் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையில் எந்த குறையும் வைக்கவில்லை.
ஸ்ரீகர் பிரசாத் மன்னவனே பாடலை கத்தரி போட்டிருக்கலாம். ஹைப் இருக்க வேண்டிய இடத்தில் தடையாக இருக்கிறது. லீனியர் எடிட்டிங் தேமே என்று மெதுமெதுவாய் கடக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளிவிட்டது.
ஒரு ஃபேன்டஸி அட்வென்ச்சர் திரைப்படத்தில் காதல், ஆக்‌ஷன், காமெடி, சென்டிமென்ட், சின்னச் சின்ன டீட்டெய்லிங், குழந்தைகள் விரும்பும் சில விஷயங்கள் என எல்லாவற்றையும் பதிவு செய்ய இயக்குநர் சிம்புதேவன் முயற்சித்திருக்கிறார். ஆனால், அது வெறும் முயற்சியாக மட்டுமே போய்விட்டதால் பலன் கிட்டவில்லை.
வழக்கமான, பழக்கமான அடிப்படைக் கதையை வைத்துக்கொண்டு, திரைக்கதையில் எதுவும் செய்யாமல் டெக்னீஷியன்கள் உழைப்பை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்?
எம்.ஜி.ஆர் படத்தின் சட்ட வட்ட செவ்வக கட்டமைப்புகளுக்கு உட்பட்ட கதைதான். அதில் எந்த த்ரில்லும், தில்லும் இல்லாமல் உருவாக்கப்பட்ட காமாசோமா என்று நகரும் திரைக்கதை எந்த உற்சாகத்தையும் கொடுக்கவில்லை.
ஒட்டுமொத்தமாக, ஃபேன்டஸி அன்வென்ச்சர் படம் என்று 'புலி'யைக் குறிப்பிடுவதற்கு தகுந்த எந்தப் பாய்ச்சலும் இல்லாதது எந்தத் தரப்பு ரசிகருக்கும் ஒவ்வாதது.
படம் பார்த்து முடிந்ததும், ஒரு ரசிகரிடம் பேசினேன். எப்படி இருக்கு என்றேன். அமைதியாய் சிரித்தார்.
பிடிச்சிருக்கா பாஸ்?
"விஜய் ரசிகன் நான். என்ன சொல்லமுடியும்?" என்று சொல்லிவிட்டு வேகமாக சென்றுவிட்டார்.
அட்ராக்ட் பண்ண வேண்டிய புலி, அட்டேன்ஷனில் கூட நிற்க வைக்காமல் சர்வ சாதாரணமாய் போகிறது!

Wednesday, September 30, 2015

வெளியான 103 படங்களில் 9 மட்டுமே லாபம் ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!



இந்தாண்டு (2015) தொடங்கி ஆகஸ்ட் வரை 8 மாதங்களை கடந்துவிட்டது தற்போது வரை தமிழில் 103 படங்கள் வெளியாகியுள்ளது இதில் வெறும் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் உள்ள படங்களே அதாவது வெறும் 9 படங்கள் மட்டுமே தயாரிப்பாளர்களுக்கு லாபத்தைப் பெற்றுத் தந்துள்ளதாம்.

இது தொடர்பாக தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது அதில் இந்தாண்டில் 8 மாதங்களில் இதுவரை 103 படங்கள் வெளியாகியுள்ளன. 


அதில் பெரிய பட்ஜெட் படங்கள் 23 மீடியம் மற்றும் சிறிய பட்ஜெட் படங்கள் 80 அடங்கும் இவற்றுக்காக ஆன மொத்த தயாரிப்பு செலவு ரூ.750 கோடியாகும். இதில் 90 சதவிகிதத்தினர் நஷ்டத்தையே சந்தித்துள்ளனர்.

இந்த 103 படங்களில் 20 பெரிய பட்ஜெட் படங்களும் 4 சிறிய பட்ஜெட் படங்களும் மட்டுமே சேட்டிலைட்டுக்கு விற்பனையாகியுள்ளது மற்றவை கிடப்பில் போடப்பட்டுள்ளன தயாரிப்பாளர்களுக்கு லாபம் கொடுத்த படங்கள் வெறும் 9 மட்டுமே. மற்ற படங்கள் தயாரிப்பாளர் விநியோகஸ்தர்கள் என அனைருக்கும் பெரும் நஷ்டத்தை கொடுத்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையினால் திரைத்துறையைச் சேர்ந்த அனைத்து பிரிவினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Sunday, September 27, 2015

ரஜினியை முந்தி தமிழ் சினிமாவில் சாதித்த விஜய்!




சிம்புதேவன் இயக்கி இளையதளபதி விஜய் நடித்த புலி அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகவுள்ளது. 

இப்படம் தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 10க்கும் மேற்பட்ட நாடுகளில் 3000 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது இந்நிலையில் தமிழ் சினிமாவை உலகளவில் கொண்டு சென்றவர் ரஜினிகாந்த் இவரின் சாதனைகளை இவரே முறியடித்து வந்தார். 

ரஜினி நடித்த சிவாஜி எந்திரன் கோச்சடையான் லிங்கா ஆகிய படங்கள்தான் அமெரிக்காவில் அதிக திரையரங்குகளில் வெளியானது ஆனால் தற்போது புலி 100க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியாகிறது. 

 மேலும் கனடாவில் ரஜினியின் கோச்சடையான்16 அரங்குகளில் வெளியானது இதுவே தமிழ் சினிமாவின் அதிக எண்ணிக்கையாக அங்கு இருந்தது தற்போது புலி 18 அரங்குகளில் வெளியாகவுள்ளதால் இது முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது பிரிட்டனில் 60க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

மேலும் சென்னை மாயாஜாலில் உள்ள அரங்குகளில் தினமும் 50 காட்சிகளுக்கு புக்கிங் நடைபெற்று வருகிறது தற்போதுவரை சென்னையில் வெளியாகவுள்ள அரங்குகள் ஒரு வாரத்திற்கு புக்காகி விட்டதாம் மேலும் விஜய் படங்களில் இதுவரை இல்லாத அளவு இப்படத்தின் வியாபாரம் உயர்ந்துள்ளது கவனித்தக்கது. இப்படத்தின் சென்னை சிட்டி உரிமை ரூ.7.15 கோடிக்கும் செங்கல்பட்டு ரூ.8 கோடிக்கும் மதுரை ரூ.6 கோடிக்கும் திருநெல்வேலி கன்னியாகுமரி ரூ.3.25 கோடிக்கும் திருச்சி ரூ.4.50 கோடிக்கும் சேலம் ரூ.3.5 கோடிக்கும் NSCஏரியா  ரூ.6 கோடிக்கும் என தமிழகத்தின் வெளியீட்டு உரிமை மட்டுமே சுமார் ரூ.40 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாககூறப்படுகிறது. 

மேலும் வெளிநாட்டு உரிமை சாட்டிலைட் என புலியின் மொத்த வியாபாரம் சுமார் 100 கோடியை தாண்டிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புலியின் மொத்த பட்ஜெட் ரூ 118 கோடி என கூறப்படுகிறது. 

இன்னும் படம் வெளியாக ஐந்து நாட்கள் உள்ளதால் இதர வியாபாரங்களும் சூடு பிடிக்கும் எனத் தெரிகிறது.

 இதனால் தங்கள் முதலீட்டை படம் வெளியாவதற்கு முன்பே தயாரிப்பாளர்கள் எடுத்துவிடுவார்கள் எனத் தெரிகிறது இவையெல்லாம் ஒருபுறம் இருக்க படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் படத்தின் உரிமை அதிக விலைக்கு விற்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

மேலும் விநியோகஸ்தர்கள் அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளதால் தியேட்டரில் டிக்கெட்களும் அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகிறது இதனால் அதிக தொகைக்கு டிக்கெட் விற்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒருபுறம் கோரிக்கைஎழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tuesday, September 22, 2015

மீண்டும் அஜித் - சிவா இணைய திட்டம்

இயக்குநர் சிவா உடன் நடிகர் அஜித் | கோப்பு படம்
தல 56' படத்தைத் தொடர்ந்து மீண்டும் இணைய அஜித் மற்றும் இயக்குநர் சிவா திட்டமிட்டு இருக்கிறார்கள்.
அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், ராகுல் தேவ், கபீர் சிங், வித்யூலேகா உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் சிவா. அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. அப்படப்பிடிப்பு முடிந்தவுடன், அக்டோபர் முதல் வாரத்தில் ஒரு பாடலைப் படமாக்க வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருக்கிறது படக்குழு. இன்னும் பெயரிடப்படாத இப்படத்துக்கு 'தல 56' என்று பணியாற்றும் தலைப்பாக வைத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் 'தல 56' படப்பிடிப்பில் இயக்குநர் சிவாவிடம் அஜித், "சிவா.. உங்களுடைய படப்பிடிப்பில் டென்ஷன் இல்லாமல் ரொம்ப ரிலாக்ஸா இருக்கேன். இன்னொரு கதை இருந்தால் சொல்லுங்க. பண்ணலாம்" என்று கூறியிருக்கிறார். இதனைக் கேட்டவுடன் இயக்குநர் சிவா மிகவும் நெகிழ்ந்து போய், "கண்டிப்பாக சார்" என்று தெரிவித்திருக்கிறார்.
அஜித்தின் இந்த பேச்சால் மீண்டும் இயக்குநர் சிவாவுடன் இணைந்து படம் பண்ணுவார் என்கிறது கோலிவுட்.
மேலும், இப்படம் முடிந்தவுடன் சத்ய ஜோதி நிறுவனம் தயாரிக்க விக்ரம் குமார் இயக்கவிருக்கும் படத்துக்கு அஜித் தேதிகள் ஒதுக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பல் சொத்தை வருவது ஏன்?


முகத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றான பற்கள் பாதிக்கப்பட்டால் பல்வேறு நோய்கள், நம்மைத் தாக்கத் தொடங்கும். 'பல் போனால் சொல் போகும்' என்பார்கள் பெரியோர். பற்களின் ஆரோக்கியத்தைக் காத்தால், உடலின் ஆரோக்கியத்தையே பாதுகாக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
பல்லின் அமைப்பு
பல்லானது வேதி அமைப்பில் கால்சியம், பாஸ்பரஸ் தாதுகளால் ஆனது. ஒவ்வொரு பல்லிலும் வெளியில் தெரிகிற மேற்பகுதிக்கு மகுடம் (Crown) என்று பெயர். பல், ஈறுக்குள் புதைந்திருக்கும் பகுதிக்கு வேர் (Root) என்று பெயர். பல் ஈறின் அடிப்பாகத்திலிருந்து, ஒவ்வொரு பல்லுக்குள்ளும் நடுவில் நரம்புகளும் ரத்தக்குழாய்களும் செல்கின்றன. இந்தப் பகுதிக்குப் பல் கூழ் (Pulp) என்று பெயர். இதைச் சுற்றி டென்டைன் (Dentine) எனும் பகுதியும், அதற்கும் வெளியே வெள்ளை நிறத்தில் பல்லுக்கு ஓர் உறைபோல் அமைந்திருக்கும் எனாமல் (Enamel) எனும் கடினமான பகுதியும் உள்ளன.
பல் சொத்தை
பல் பாதிப்புகளில் முதன்மையானது, பல் சொத்தை (Tooth Decay). குழந்தைகள், இளம் வயதினர், முதியோர் என எல்லோரையும் இது பாதிக்கிறது. இது ஏற்படுவதற்கு முக்கியக் காரணம், இனிப்புகளை அதிகமாகச் சாப்பிடுவதுதான். குறிப்பாக, பற்களில் ஒட்டக்கூடிய இனிப்பு மாவுகள், பிஸ்கட்டுகள், மிட்டாய்கள், சாக்லேட்கள், ஐஸ்கிரீம், குக்கீஸ், கேக், பேக்கரிப் பண்டங்கள் போன்றவற்றில் உள்ள சர்க்கரைப் பொருள் பல் இடுக்குகளில் ஒட்டிக்கொள்ளும்போது, வாயில் உள்ள பாக்டீரியாக்கள் இவற்றுடன் வினைபுரிந்து, லாக்டிக் அமிலத்தைச் சுரக்கின்றன, இந்த அமிலம் எனாமலை அரித்துப் பற்களைச் சிதைக்கிறது. இதன் விளைவால் பற்கள் சொத்தையாகின்றன.
பற்களைச் சுத்தமாகப் பராமரிக்கத் தவறினாலும் பாக்டீரியாக்கள் வளர்ந்து பல் சொத்தையை உண்டாக்கும். காபி, தேநீர் போன்றவற்றை அதிகமாகக் குடிப்பது, புகைபிடிப்பது, பான்மசாலா/வெற்றிலை பாக்குப் போடுவது போன்ற பழக்கங்களால் பற்களில் காரை படியும். இதில் பாக்டீரியாக்கள் சந்தோஷமாக வாழும். இந்த நிலைமை நீடித்தால், பற்களில் சொத்தை விழுந்து, பற்களின் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்கும்.
குழந்தைகள் இரவில் புட்டிப்பாலைக் குடித்தபடியே உறங்கிவிடுவார்கள். அப்போது பற்களின் மேல் பால் தங்கி, சொத்தையை ஏற்படுத்திவிடும். சிலருக்குப் பரம்பரை காரணமாகவும் பல் சொத்தை வரலாம்.
அறிகுறி என்ன?
சொத்தைப் பல்லின் ஆரம்ப அறிகுறி, பற்கூச்சம். முக்கியமாக இனிப்பு சாப்பிடும்போது, குளிர்ச்சியான அல்லது சூடான பானங்களை அருந்தும்போது பற்களில் கூச்சம் ஏற்படும். பிறகு பல்லில் வலி ஏற்படும். உணவை மெல்லும்போது பல் வலி அதிகரிக்கும். சொத்தைப் பல்லை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால், எனாமலை அடுத்துள்ள டென்டைன் பகுதிக்கும் சொத்தை பரவிவிடும். அப்போது பற்களில் கறுப்புப் புள்ளி அல்லது கோடு தெரியும். அங்குக் குழி விழும். காய்ச்சல், கழுத்தில் நெறி கட்டுதல், கழுத்து வலி, காது வலி போன்றவையும் தொல்லை தரும். இந்த நிலைமையிலும் சிகிச்சை பெறாவிட்டால், பல் கூழ் மற்றும் வேர்களில் சீழ் பிடித்துப் பழுதாகிவிடும். நாளடைவில் இந்த வேர்கள் வலுவிழந்து போகும். அப்போது பற்கள் ஆட்டம் கண்டு தாமாகவே விழுந்துவிடும்.
சிகிச்சை என்ன?
முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை பல் சொத்தையாகிவிட்டால், ஒருவித சிமெண்டைக் கொண்டு சொத்தையை மூடுவார்கள் அல்லது அந்தப் பல்லை நீக்கிவிடுவார்கள். இப்போது இந்த நிலைமை மாறியுள்ளது. எந்த அளவுக்குச் சொத்தை பல்லில் பரவியுள்ளது என்பதை எக்ஸ்-ரே எடுத்துப் பார்ப்பதன் மூலம் அறியலாம். பல்லின் எந்தப் பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்துச் சிகிச்சை மாறும்.
எனாமல், டென்டைன் வரைக்கும் சொத்தை இருந்தால் ‘ஃபில்லிங்’ எனப்படும் நிரப்புதல் சிகிச்சை போதுமானது. சொத்தையானது பல் கூழ்வரை சென்றிருந்தால், ‘வேர் சிகிச்சை’ என்று அழைக்கப்படும் ‘ரூட் கனால் சிகிச்சை’ (Root canal treatment) செய்யப்பட வேண்டும்.
ரூட் கனால் சிகிச்சை
இந்தச் சிகிச்சையின்போது ஈறுகளில் மயக்க மருந்தைச் செலுத்தி, பல் கூழ் வரை டிரில் செய்து பல்லில் ஏற்பட்டுள்ள சொத்தை, சீழைத் துப்புரவாக அகற்றிவிட்டு, அங்குள்ள நரம்பையும் வெட்டிவிட்டு, நன்றாகச் சுத்தப்படுத்துகிறார்கள். அங்கு நோய்த்தொற்று இல்லை என்று உறுதி செய்த உடனேயோ அல்லது 15 நாட்கள் கழித்தோ பல்லைச் சுத்தப்படுத்திய குழியில் ‘கட்டா பெர்ச்சா பிசின்’ (Gutta-percha resin), ஜிங்க் ஆக்சைடு, யூஜினால் (Eugenol) கலந்த வேதிப்பொருளைக் கொண்டு நிரப்புகிறார்கள். இதைத் தொடர்ந்து அந்தப் பல்லுக்குக் `கேப்’ போட்டு மூடிவிடுகிறார்கள். இதன் பலனால் சொத்தை சரியாகிவிடும். பல்லுக்கு உறுதித் தன்மை கிடைத்துவிடும். சிலருக்கு ‘ரூட் கனால் சிகிச்சை’ செய்ய முடியாத அளவுக்குப் பற்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும். அத்தகைய பற்களை நீக்கித்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை.
செயற்கை பல்
சிலர் சொத்தை விழுந்த பல்லை எடுத்து விடுகின்றனர். ஆனால், பதிலுக்கு அந்த இடத்தில் செயற்கைப் பல்லைக் கட்டுவதில்லை. இது தவறு. இதனால் அருகில் உள்ள பற்களுக்குப் பாதிப்பு ஏற்படும். இந்தப் பற்கள் பக்கத்தில் சாய்ந்துவிடலாம். இடைவெளி அதிகமாகிவிடலாம். அப்போது நாக்கை அடிக் கடி கடித்துக்கொள்ள வேண்டி வரும். பல பற்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தால் பேச்சு குழறும்.
சொத்தையைத் தடுக்க வழி
# காலை, இரவு என இரண்டு வேளை பல் துலக்க வேண்டும். மேல் தாடைப் பற்களைக் கீழ்நோக்கிச் சுழற்றியும், கீழ்த் தாடைப் பற்களை மேல் நோக்கிச் சுழற்றியும் துலக்க வேண்டும். கடிக்கும் பகுதியை முன் பின்னாகத் துலக்க வேண்டும். நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டும்.
# ஃபுளூரைடு கலந்த அனைத்து வகைப் பற்பசைகளுமே உகந்தவைதான். பல்லில் தேய்மானம் இருந்து, பல்லில் கூச்சம் ஏற்பட்டால், அப்போது மட்டும் 'டிசென்சடைசிங்' பற்பசையைப் பயன்படுத்தலாம்.
# பட்டாணி அளவிலான பற்பசை போதுமானது.
# கரி, உப்பு, மண், செங்கல்பொடி, சாம்பல், நெல்உமி போன்றவற்றால் பல் துலக்கக் கூடாது.
# பல் துலக்கியைப் பொறுத்தவரையில், மிருதுவான அல்லது நடுத்தர வகை பல்துலக்கியைப் பயன்படுத்துவது பற்களின் பாதுகாப்புக்கு நல்லது.
# ஆரோக்கியமான நிலைப்பற்களுக்குப் பால்பற்கள்தான் அஸ்திவாரம். ஆகவே, கை விரலில் பொருத்திக்கொள்ளும் மிருதுவான 'விரல் பல்துலக்கி'யைப் பயன்படுத்தி, ஐந்து வயதுவரையிலும் குழந்தைகளுக்குப் பெற்றோரே பல் துலக்கிவிட வேண்டும்.
# குழந்தைக்குப் பாட்டிலில் பால் கொடுத்தவுடன், ஈறுப் பகுதியைத் தண்ணீரால் நன்றாகத் துடைத்துவிட வேண்டும்.
# தினமும் ஒரு காரட், ஒரு வெள்ளரிக்காயைச் சாப்பிட்டு வந்தால், பல் சுத்தமடையும்.
# வைட்டமின் - சி, வைட்டமின் - டி, கால்சியம், பாஸ்பரஸ் சத்துகள் மிகுந்த மீன் எண்ணெய், திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, எலுமிச்சை, நெல்லிக்காய், பச்சையிலைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள் முதலியவற்றையும், புரதச்சத்து மிகுந்த பால், முட்டை, இறைச்சி, பயறு, பருப்பு முதலியவற்றையும் தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால், பல் ஈறுகளும் எனாமலும் நல்ல வளர்ச்சி பெறும்.
# பற்களில் ஒட்டிக்கொள்ளக் கூடிய இனிப்பு மாவு, சாக்லேட், மிட்டாய், ஐஸ்கிரீம் போன்றவற்றைச் சாப்பிட்டால் உடனே வாயைக் கொப்பளிக்க வேண்டும்.
# காபி, தேநீர் உள்ளிட்ட அதிகச் சூடான உணவு வகைகளையும், ஐஸ்கிரீம் உள்ளிட்ட அதிகக் குளிர்ச்சியுள்ள உணவு வகைகளையும், குளிர் பானங்களையும் அடிக்கடி சாப்பிடக்கூடாது.
# வெற்றிலைப் பாக்கு போடுவது, புகைபிடிப்பது, பான்மசாலா பயன்படுத்துவது, மது அருந்துவது போன்றவற்றைத் தவிர்த்தால், பல்லுக்குப் பாதுகாப்பு கிடைக்கும்.
# குண்டூசி, குச்சி போன்றவற்றால் பல் ஈறுகளைக் குத்தி அழுக்கு எடுக்கக்கூடாது.
# குளிர்பானங்கள் குடிப்பதைக் குறைத்துக்கொள்வது பற்களுக்கு நல்லது. காரணம், அவற்றில் உள்ள அமிலங்கள் எனாமலை தாக்கிப் பற்களையும் சிதைக்கின்றன.
# குழந்தைகளுக்கு விரல் சூப்பும் பழக்கம் இருந்தால், சிறு வயதிலேயே அதைத் தடுத்து விட வேண்டும். தவறினால், சொத்தைப் பற்கள் மட்டுமல்ல தெற்றுப் பற்களும் தோன்றக்கூடும்.
# தினமும் பால் அருந்துங்கள். அதிலுள்ள கால்சியம் பல்லுக்குப் பாதுகாப்பு தரும்.
# நகம் கடிக்கக் கூடாது. காரணம், அதன் மூலம் கிருமிகள் வாய்க்குள் சென்று நோய்களை உண்டுபண்ணும்.
# ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறும் பழக்கத்தைப் பின்பற்றினால், பற்சொத்தை உள்ளிட்ட பல்வேறு பல் பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே தவிர்த்துவிடலாம்.

Friday, September 18, 2015

த்ரிஷா இல்லனா நயன்தாரா - பிட்டு பிட்டாக

ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் இரண்டாவது படம், பிட்டு படம் பார்க்காம சும்மா இருப்பியா? என தமிழ் சினிமா ஹீரோயின் ஆனந்தி கேட்கும் ஒற்றைக் கேள்வி, எல்லாவற்றுக்கும் மேலாக டீஸர், ட்ரெய்லர் கொடுத்திருக்கும் ஹைப் என்ற இந்த காரணங்களே ’த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படம் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.
” நம்புங்கப்பா இது பிட்டு படம் இல்லப்பா ” என்று ட்ரெய்லரில் ஜி.வி.பிரகாஷ் சொன்னார்.
’த்ரிஷா இல்லனா நயன்தாரா’ எப்படிப்பட்ட படம்?
கதை: ஜி.வி.பிரகாஷ் ஸ்கூல் படிக்கும்போதே ஆனந்தியைக் காதலிக்கிறார். ஆனந்தியும் ஜி.வி.யை லவ்வுகிறார். தவறான புரிதலால் ஆனந்தி பிரிந்து செல்கிறார். அந்த கோபத்தில் மனிஷாவைக் காதலிக்கிறார். மனிஷாவும் காதலைக் கை கழுவுகிறார். அதற்குப் பிறகு ஆனந்தியைத் துரத்தும் ஜி.வி என்ன செய்கிறார் என்பதுதான் மீதிக்கதை.
ஸ்கூல் பையனுக்கே உரிய தோற்றத்தில் ஜி.வி.பிரகாஷ் ஓ.கே. ஆனால், வெகுளியாக தன்னை காட்டிக்கொள்வதற்காக முகத்தில் பரவவிடும் ரியாக்‌ஷன்கள்தான் பொருந்தவில்லை. டயலாக் டெலிவரியில் உறுத்தாமல் இருக்கிறார். சரக்கடித்து சலம்புவது, பெண்கள் பற்றி பேசுவது என டயலாக் வைத்தே எஸ்கேப் ஆகும் ஜி.வி.இனிவரும் காலங்களில் கொஞ்சமாவது நடிப்பார் என்று எதிர்பார்ப்போமாக.
அழுகையும், சோகமும், ஈகோவில் வெடிப்பதுமாக ஆனந்தி நடிப்பில் ஈர்க்கிறார். வழக்கம்போல ஒரு கெஸ்ட் ரோல் என்றதும் உள்ளேன் ஐயா என அட்டெண்டன்ஸ் போட்டிருக்கிறார் ஆர்யா.
மனிஷா யாதவ், சிம்ரன், யூகி சேது, மாரிமுத்து, விடிவி கணேஷ் ஆகியோர் பொருத்தமான தேர்வு. விடிவி கணேஷ் பேசும் இரட்டை அர்த்த வசனங்கள் முகம் சுளிக்க வைக்கின்றன.
படம் முழுக்க இச்சையும், பச்சையும் கலந்து இருப்பதால் திரைக்கதை பற்றி அறிமுக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கொஞ்சம் கூட கவலைப்படவில்லை.
ரிச்சர்ட் எம். நாதனின் ஒளிப்பதிவு படத்துக்கு பெரும் பலம். ஆண்டனி எல். ரூபன் இன்னும் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.
ஜி.வி.பிரகாஷ் இசையில் பிட்டு படம்டி, டகால்டி பாடல்களுக்கு ரசிகர்களின் அப்ளாஸ் அள்ளியது.
குடிக்குற பசங்க படிக்க ஆரம்பிச்சிட்டாங்க. படிக்குற பசங்க குடிக்க ஆரம்பிச்சிட்டாங்க என்பதைப் போல பல வசனங்களுக்கு தியேட்டரில் விசில் பறந்தது.
படத்துக்கு மூணு கிளைமாக்ஸ் இருப்பதைப் போல காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். கிளைமாக்ஸ் காட்சி வரும்போது இன்ன்ன்னுமா.... லிஸ்ட் பெரிசா போகுதே என யோசிக்க வைக்கிறது.
மொத்தத்தில் காட்சிகளில் எந்தக் கோர்வையும், தொடர்ச்சியும் இல்லாமல் பிட்டு பிட்டாக இருக்கிறது.